இதனை இயற்கைக்கு ஆதரவு அளிக்கும் திருமணமாக நடத்துவது என்று முடிவெடுத்து சிறப்பாக நடத்தியுள்ளனர் தீபன் ஷா - அருஷி ஷா பெற்றோர்கள். திருமணம் நடந்த வீடு முதல், மணமக்கள் வரை இயற்கையோடு இணைந்திருந்தார்கள்.
மணமகன் பருத்தி வேட்டி அணிந்திருக்க, மணமகள் காதி பட்டு சேலையில் இருந்தார். விருந்து நடைபெறும் இடத்தில் பன்னீர் டிக்கா, ஸ்பிரிங் ரோல், ரசாயனக் கலவையுடன் கண்ணைக் கவரும் இனிப்புகள் என எதுவும் இல்லை. அதற்கு முற்றிலும் மாறாக, உடலுக்கு உகந்த வேக வைத்த வேர்க்கடலை, சுவையான பழங்கள் தான் இருந்தன.
திருமண மண்டபத்தில் பயன்படுத்தப்பட்ட அனைத்து சாமான்களும் செப்பு, வெள்ளி, பித்தளையில் இருந்தன. பெண்ணிற்கு சீதனமாக டிவியோ, வாஷிங்மெஷினோ தரப்படவில்லை. ஒரு பசுவும், கன்றும் சீதனமாக அளிக்கப்பட்டது. பரிசுப் பொருட்களிலும் பிளாஸ்டிக் தவிர்க்க என்று திருமணத்திற்கு வந்தவர்களுக்கும், திருமண பத்திரிகையில் வேண்டுகோள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மணமகள் குடும்பத்தினர் மிகுந்த செல்வந்தவர்கள் என்ற போதிலும், திருமணம் வீட்டில் எளிமையாக நடந்தது. முதல்நாள் வரவேற்பில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு முற்றிலும் ரசாயனக் கலப்பின்றி விளைவிக்கப்பட்ட காய்கறிகளால், தூய நல்லெண்ணையில் தயாரான புலாவ் பரிமாறப்பட்டது. உடலுக்கு உகந்த உணவுகள் மட்டுமே திருமண நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.