வார்த்தைகளால் சொல்ல முடியாதவற்றைக் கூட உங்களின் முத்தம் சொல்லிவிடும் சத்தமில்லாமல்.
ஆம்.... நீங்கள் விரும்பும் நபர் மீது கொண்டுள்ள ஆழமான காதலை எவ்வளவு வார்த்தைகளைக் கொண்டு வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அதெல்லாம் ஒரு முத்தத்திற்கு ஈடாகுமா?
முத்தம் என்பது ஒரு தனி கலை. தனி நபர்களின் மொழி. ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு கருவி. இந்த கருவியை கையாளத் தெரிந்திருந்தால் காதல் வாழ்க்கையில் நீங்கள்தான் மன்னர்கள்.
WD
முதல்முறை காதல் முத்தம் பெறும்போதோ அல்லது வழங்கும்போதே மிக பரபரப்பாகத்தான் இருக்கும். ஆனால் அந்த பரபரப்பான கணங்கள் நம் வாழ்நாள் வரை இனிதான நிகழ்வாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.
அவர்தான் முதலில் வழங்க வேண்டும் என்று எதிர்பார்த்திருக்க வேண்டாம். உங்களுக்கான காதலை நீங்களே முதலில் வெளிப்படுத்தலாம் என்பதில் ஐயமில்லை.
முத்தத்தில் பல வகையுண்டு. அன்னையின் முத்தம், சகோதரரின் முத்தம், குழந்தையின் முத்தம், நண்பர்களின் முத்தம், காதலர்களின் முத்தம் என இது நீண்டு கொண்டே செல்லும்.
காலையில் தரும் முத்தம் முழு நாளையுமே இனிதாக்கும். மாலையில் தரும் முத்தம் மனதை உற்சாகப்படுத்தும். இரவில் தரும் முத்தம் இதமான தூக்கத்தை தரும் என முத்தத்திற்கு இவ்வளவு தத்துவங்கள் சொல்கிறார்கள் மருத்துவர்களும்.
ஒருவரையொருவர் கட்டி அணைத்துக் கொண்டு தரும் முத்தத்தினால் உடலில் ஹார்மோன் சுரப்பது அதிகரித்து உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சி கிடைக்கிறது. முத்தம் பெறுபவருக்கு மட்டுமல்லாமல் தருபவருக்கும் இன்பதை அளிக்கிறது.
WD
நீங்கள் உடல் நலத்தோடும், புத்துணர்ச்சியோடும், எதிலும் வெற்றியுடனும் வாழ விரும்பினால் தினமும் வீட்டில் இருந்து கிளம்பும்போது உங்களது வாழ்க்கைத் துணைக்கு முத்தமளித்துவிட்டு கிளம்புங்கள். அப்புறம் பாருங்கள் உங்களது நாள் இனிய நாளாக மட்டுமல்ல வெற்றிகள் கிட்டும் நாளாகவும் அமையும்.