நகைச்சுவை என்பது எங்கும் எப்போதும் வரக்கூடியது. நீ நகைக்காத நாளை வாழா நாளில் வை என்கிறது பழமொழி.
சரி இன்று சிரிக்க ஒரு காரணம் கிடைத்துவிட்டது. அதுதான் இந்த நகைச்சுவைகள்.
பூகம்பம்
webdunia photo
WD
திடீரென பூகம்பம் ஏற்படுகிறது. இதில் ஒரு பெண் கீழே விழுந்துவிடுகிறாள். பிறகு வீட்டிற்கு வரும் கணவனிடம் நடந்ததை விளக்குகிறார்.
மனைவி - என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க.. நான் அப்படியே கீழ விழுந்துட்டேன்.
கணவன் - நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?
நீதிமன்றத்தில்...
நீதிபதி : நீங்கள் யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறீர்கள்? ஆண் : ஒரு பெண்ணை.
நீதிபதி : பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்? ஆண்: ஏன் செய்து கொள் மாட்டார்கள். என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!.