அந்த வகையில்தான், சோமாலியாவில் 112 வயது தாத்தா(?), 17 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சோமாலியாவைச் சேர்ந்த அகமத் முகமது டோரே 1897-ம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு ஏற்கனவே 5 மனைவிகளும் அவர்கள் மூலம் 13 குழந்தைகளும், 114 பேர மற்றும் கொள்ளுப் பேரக் குழந்தைகளும் உள்ளனர். இவரது மூத்த மகனுக்கு தற்போது 80 வயதாகிறது.
காடு வா வா வீடு போ போ என்ற நிலையில் 17 வயது சபியா அப்துல்லா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளோர் டோரே.
இது குறித்து டோரே கூறுகையில், சபியாவை திருமணம் செய்து கொண்டிருப்பதால் எனது கனவு நனவாக இறைவன் உதவியிருக்கிறான். சபியாவை நான் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், எனது காதலைச் சொல்லி சம்மதிக்க வைத்தேன். அவள் முழு மனதுடன்தான் என்னைத் திருமணம் செய்து கொண்டாள். சபியா மூலமும் குழந்தைகள் பெற வேண்டும் என்பது எனது ஆசை என்கிறார், அந்த பல் இல்லாத கிழவர் டோரே.
இதில் மற்றொரு வியப்பு என்னவென்றால், இந்த திருமணம், இரு வீட்டார் சம்மதத்துடன் ஒரு திருமண மண்டபத்தில், டோரேவின் குடும்பம் சகிதமாக வெகு சிறப்பாக நடைபெற்றள்ளது என்பதுதான்.