வறுமையில் வடும் பெண்ணிற்கு வரதட்சணைக் கொடுத்து திருமணம் செய்து கொள்ளும் மணமகன் வீட்டாரைப் பார்த்துள்ளோம். இங்கு, ஒரு பெண்ணிற்கு 8 முறை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து அழகியாக மாற்றிக் கொண்டு அவரையேத் திருமணம் செய்து கொண்ட ஒரு மருத்துவரைப் பற்றிப் பார்க்கலாம்.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ரெசா வோசவ் (48), ஒரு பெண்ணை சமீபத்தில் சந்தித்தார். அவர் பெயர் கேனி. 33 வயதான இவர் ஒரு ஓட்டலில் பணியாற்றி வந்தார்.
கேனியைப் பார்த்ததுமே ரெசா வோசவ்க்கு பிடித்து விட்டது. ஆனால் அவரது அழகில் ஒரு சில குறைபாடுகள் இருப்பதாக நினைத்த ரெசா வோசவ் அவரை அவரை முழு அழகியாக மாற்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டார்.
ஒரு முறை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய, அதுவே தொடர்ந்து அங்கங்கே சில டச் அப்கள் போல சுமார் 8 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டியதாகிவிட்டதார்.
அதாவது கேனியின் மார்பகத்தையும், தொடைகளையும், கண்களையும், முகத்தையும் மாற்றி அமைக்க அவர் அறுவை சிகிச்சை செய்தார்.
இது குறித்து வோசவ் கூறுகையில், நான் முதல் முறையாக கேனியை சந்தித்தபோது, அவர் உடல் அமைப்பில் சில குறைபாடுகள் இருப்பதை நான் கவனித்தேன். இருந்தபோதிலும் அவரிடம் இருந்த அழகு என்னை கவர்ந்தது. அவர் இடுப்பும் தொடைகளும் பெரிதாக இருந்தன. அதனால் சில திருத்தங்கள் செய்தேன். பிறகு மேலும் சில திருத்தங்கள் என 8 முறை அறுவை சிகிச்சை செய்தேன் என்று கூறினார்.
கேனியின் மார்பகத்தையும், உதடுகளையும் பெரிதாக மாற்றினார். கண்ணிமைகளை கொஞ்சம் உயர்த்தினார். நெற்றியை சமப்படுத்தினார். இதன் மூலம் கேனி இன்னும் அழகான பெண்ணாக மாறினார். இந்த அறுவை சிகிச்சைக்கு 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவு ஆனது.
இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு முழு அழகியான கேனியை வோசவ் திருமணம் செய்து கொண்டார்.