தங்கபாண்டியனின் மகள் தமிழச்சி தங்கபாண்டியன், ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி, மாறனின் மகன் தயாநிதி மாறன் என திமுக தலைவர்களின் வாரிசுகள் முன்னிலை பெற்று சென்னையை திமுகவின் வெற்றி கோட்டையாக மாற்றியுள்ளனர்.
ஆனால், மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் முன்னிலை பெற்றும் ஒரு பயனும் இல்லாத நிலையே உள்ளது. ஆனால் அதிமுகவை பொருத்தவரையில் சட்டமன்ற இடைத்தேர்தலில் எட்டு தொகுதியில் முன்னிலை பெற்று மீதியுள்ள இரண்டு வருட ஆட்சியை நிறைவு செய்ய போதுமானதாக உள்ளது.