பணப்பட்டுவாடா செய்பவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா? உயர்நீதிமன்றம் கேள்வி

புதன், 17 ஏப்ரல் 2019 (12:54 IST)
வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்ய குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த பரிந்துரையை ஏற்று வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
இதனை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தரப்பு வாதம் பின்வருமாறு, 
 
தேர்தல் தேதி அறிவிகப்பட்ட பின்னர் ஜனாபதிக்கு தேர்தலை ரத்து செய்யும் அதிகாரம் இல்லை. தவறிழைக்கும் வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவே அவருக்கு அதிகாரம் உள்ளது. 
 
எனவே, தவறிழைக்கும் வேட்பாளர் மற்றும் கட்சி மீதுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு தேர்தல் ரத்து செய்வது மக்களின் வரிப்பணம்தான் வீணாக்குகிறது.
தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு அனைத்தும் தயாராக உள்ள நிலையில் திடீரென தேர்தல் ரத்தாகியுள்ளது. புகாருக்குள்ளான வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதே எங்கள் வாதம் என விவாதித்தனர். 
 
இதற்கு நீதிபதிகள், தேர்தலை ரத்து செய்ய வேண்டாமெனில், பணப்பட்டுவாடா செய்தவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா? தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மட்டுமே மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தகுதிநீக்க முடியும். வேட்பாளரை எப்படி செய்ய முடியும்? என கேட்க, இன்னும் வழக்கு நடந்து வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்