விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இப்போது தேர்தல் பிரச்சாரப் பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார். அவர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப் பல மாவட்டங்களுக்குச் சென்று வருவதால் தனக்கு நிரந்தர போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது. மேலும் 2015ஆம் ஆண்டு பட்டுகோட்டையிலும், 2016ஆம் ஆண்டு சென்னை தியாகராயநகரிலும் தன்னைக் கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இப்போதும் தொலைபேசி வாயிலாக கொலைமிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
தனக்குப் போதிய பாதுகாப்பு இல்லாததாகவும் தேர்தல் பிரச்சாரங்களுக்காக பல மாவட்டங்களுக்கு சென்று வருவதால் தனக்கு நிரந்தர பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ’ திருமா வளவனின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை. அவர் எந்த மாவட்டத்துக்கு சென்றாலும் அவருக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்படுவ்கிறது’ எனக் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.