எக்ஸ்சாம்பிள் சொல்லி மாட்டிக்கொண்ட ராமதாஸ்: வச்சு செய்யும் நெட்டிசன்கள்

புதன், 3 ஏப்ரல் 2019 (12:07 IST)
காங்கிரஸின் நீட் குறித்த அறிவிப்பை கிண்டலடித்த ராமதாஸை நெட்டிசன்கள் டுவிட்டரில் கண்டமேனிக்கு வசைபாடி வருகின்றனர்.
101 சதவீதம் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம், இனி திராவிடக் கட்சிகளோடு கூட்டணியே இல்லை, திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது பெற்ற தாயுடன் படுக்கையை பகிர்வது போன்றது என்று வீரவசனம் பேசி, மக்களை முட்டாளாக்கிய பாமக தற்பொழுது தனது கோட்பாடுகளை மீறி மக்களவைத் தேர்தலுக்காக 7 சீட்டுகளை பெற்றுக் கொண்டு அதிமுக மற்றும் பாஜகவோடுக் கூட்டணி அமைத்து அதிமுக, பாஜகவிற்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது.
 
ஆனால் பழக்கதோஷத்தில் ராமதாஸ் எந்தக் காரணத்திற்கும் திமுக, அதிமுகவிற்கு ஓட்டு போடாதீர்கள் என்று கூறியும் வருகிறார்.
 
இதற்கிடையே நேற்று காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நீட் ரத்துசெய்யப்பட்டு அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றவாறு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என கூறியிருந்தது.
 
இதனை விமர்சிக்கும் வகையில் ராமதாஸ் தனது டிவிட்டரில் நீட் தேர்வு ரத்து. ஆனால், நுழைவுத் தேர்வு உண்டு: காங். தேர்தல் அறிக்கை -பிச்சைகாரனுக்கு சோறு இல்லை என்றாளாம் மருமகள். அதைக்கேட்ட மாமியார், பிச்சைக்காரனைக் கூப்பிட்டு, ’’அதெப்படி அவள் சொன்னால் நீ கேட்கலாம். இப்போ நான் சொல்கிறேன். சோறு இல்லை நீ போ” என்றாளாம். இதுவும் அப்படித் தான்! என குறிப்பிட்டிருந்தார்.
 
இதனைப்பார்த்து கடுப்பான நெட்டிசன்கள் இதைபேச உங்களுக்கு தகுதியே இல்லை என கண்டமேனிக்கு அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்