வரும் மக்களவைத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.அதிமுக அமைத்துள்ள மெகா கூட்டணியில் நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளனர். சில காமெடி நடிகர்களும் ஜெயலலிதா இருக்கும் பொழுதிலிருந்தே பேசி வருகின்றனர். தற்போதும் அது தொடர்கிறது. இந்நிலையில் நடிகர் கஞ்சா கருப்பு திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.