மோடியின் படத்தை அணிந்திருந்த முதியவர் கொலை

ஞாயிறு, 14 ஏப்ரல் 2019 (18:32 IST)
அனைத்துக் கட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலுக்காக தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இருபெரும் திராவிட கட்சிகள் போட்டா போட்டி போட்டுக்கொண்டு களப்பணியாற்றி வருகின்றனர். இதில் தமிழகத்தில்  அதிமுகவின் மெகா கூட்டணியில் பாஜக கூட்டணி வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. 
இந்நிலையில் மதுரையை சேர்ந்த கோவிந்தரராஜ் என்பவர் மோடி படத்தை வைத்துக்கொண்டு பாஜகவுக்கு வாக்கு சேகரிக்கும் போது கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்சியை ஏற்பட்டுள்ளது.
 
கோவிந்தரராஜுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.  ஆனால் தன் குடும்பத்தாரிடமிருந்து விலகி தனித்து வாழ்ந்து வந்தார்.
 
பாஜக கட்சியின் மீது இவருக்கு மிகப்பெரும் ஈர்ப்பு இருந்துள்ளது. எனவே நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க எண்ணினார். பின்னர் ஒரத்தநாடு மற்று அதைச் சுற்றியுள்ள இடங்களில் தீவிர பிரசாரம் செய்துவந்துள்ளார்.
 
பிரதமர் மோடியின் புகைப்படத்தை தன் கழுத்தில் அணிந்து ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தார்.
 
ஆனால் அங்கிருந்த ஓட்டுநர் கோபிநாத் என்பவர், முதியவர் கோவிந்தராஜுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது கைகலபாகியது. இதனால் ஓட்டுநர் முதியவரை அடித்து உதைத்தார்.  இதில் அடிதாங்கமுடியாமல் மயங்கி விழுந்தார். 
 
இதனையடுத்து முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது காவல்துறையினர் இதுபற்றி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்