நிகழ்ச்சி நடைபெற்று முடிந்த பின்னர் அதிமுக தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறி ஈபிஎஸ், ஓ.பி.எஸ் தொண்டர்கள் பிரச்சனையில் ஈடுபட்டதாக தெரிகிறது. உடனடியாக அங்கிருந்த போலீஸார் சண்டை போட்ட கோஷ்டியினரை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். இதனால் அந்த இடமே களோபரமானது.