தற்போது 100 திரைக்கலைஞர்கள் கூட்டாக சேர்ந்து ஜனநாயகத்தை காப்போன் என்ற ஒரு அமைப்பில் சேர்ந்துள்ளனர். இதில் குறிப்பாக வெற்றிமாறன், லீனா மணிமேகலை, மலையாள இயக்குநர் ஆஷிப் அபு ஆகிய தமிழ் சினிமா இயக்குநர்கள் கூட்டாக ஒரு அறிக்கை வெளிட்டுள்ளனர்.
அதில் கூறியுள்ளதாவது :
நம் இந்திய நாடு சோதனையான காலகட்டத்தை சந்தித்துள்ளது. கலாசார ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும் பலவேறுபாடுகள் இருந்தாலும் நாம் எப்போதும் ஒன்றாக இருக்கிறோம். வரும் நாடாளுமன்றத்தேர்தலில் சரியாகத் தேர்வு செய்ய வேண்டும்.
விவசாயிகள் பாதிக்கப்படுள்ளனர்,. எனவே பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது பிழையாக அமையும். அதனால் நமது கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் எல்லாவிதமாக தணிக்கைகளுக்கும் ஈடுபடாத அரசாங்கத்தை தேர்வு செய்வோம். இவ்வாறு அந்த தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.