எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம்.! தேர்தல் அறிக்கை வெளியிட்ட சரத்பவார்..!

Senthil Velan

வியாழன், 25 ஏப்ரல் 2024 (14:42 IST)
சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு ஏழு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட வாக்கு பதிவு தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் நடைபெற்றது.
 
இரண்டாம் கட்ட தேர்தல்  13 மாநிலங்களின் 83 தொகுதிகளில் நாளை நடைபெறுகிறது.  இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ALSO READ: காங்கிரஸ் கட்சியில் மன்சூர் அலிகான்.? மீண்டும் தாய் கழகத்தில் இணைய கோரி கடிதம்..!

ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் பெண்களின் இடஒதுக்கீடு மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பாடுபடுவோம் பாடுபடுவோம் என்றும் தேர்தல் அறிக்கை கூறப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்