இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வரும் 19 ஆம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.50,000 எனவும், விண்ணப்ப படிவத்தை தலைமைக் கழகத்தில் ரூ.2000 வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்றும் திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.