தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்த நிலையில், தேர்தல் பிரச்சாரங்களும் களைகட்டி வருகிறது. மு.க.ஸ்டாலினின் முதல் பிரசார பொதுகூட்டம் நாளை மாலை 5 மணிக்கு திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சிறுகனூர் பகுதியில் நடைபெறுகிறது.
இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேரு, திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.