இந்தியாவின் நிரந்தர பிரதமராக நரேந்திர மோடி இருப்பார்.வாக்கு சேகரிப்பில்- ஓபிஎஸ் பேச்சு

J.Durai

செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (14:50 IST)
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
 
பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 
 
அப்போது ஏராளமான தொண்டர்கள் பலாப்பழங்களுடன் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
 
ஓ.பன்னீர்செல்வம் தனது பரப்புரையில்...
 
இயக்கத்தின் சார்பாக பல தேர்தல்களை கண்டுள்ளேன். ஆனால் தற்போது ஒரு நிராயுதபானியாக சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். இராமநாதபுரத்தில் ஆறு பன்னீர்செல்வம்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். சதி திட்டத்தின் மூலம் ஆறு பன்னீர்செல்வங்களும் வந்துள்ளனர். இந்த ஆறு பன்னீர்செல்வத்தில் ஓடக்கார பன்னீர்செல்வம் நான் மட்டும்தான். இன்னொரு ஓட்டக்கார பன்னீர்செல்வத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
 
ஆறு பேரும் முதல் சின்னமாக வாளி, இரண்டாவது சின்னமாக பலாப்பழம், மூன்றாவது சின்னமாக திராட்சை கொத்து கேட்டோம். குலுக்கல் முறையில் முதல் நபருக்கு வாளி சின்னம் ஒதுக்கப்பட்டது.
 
இரண்டாவதாக நடைபெற்ற குலுக்களில் எனக்கு பலாப்பழம் சின்னம் விழுந்தது. வாளி சின்னத்தை விட பலாப்பழம் நமக்கு கிடைத்தது இறைவன் செயல். மா, பலா, வாழை முக்கனிகளில் அத்தனை புரத சத்துக்களும் உள்ளது. அனைவரின் கைகளில் செல்போன் இருப்பதால் பலாப்பழம் சின்னம் பரவிவிட்டது.
 
இந்தியாவின் நிலையான பிரதமராக நரேந்திர மோடி வரவேண்டும் என மக்கள் மனதில் அலை அனலாக வீசிக் கொண்டிருக்கிறது. 400 க்கும் மேற்பட்ட இடங்களில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும் சூழல் உள்ளது. அந்த அலைகடலில் நானும் ஒருவனாக என்னுடைய வெற்றியை கொண்டு போய் சேர்க்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. 
 
பாரத பிரதமர் அவர்கள் தேசிய அளவில் ஒரு கூட்டணியை அமைத்தார். தனக்கு வலது புறத்தில் எடப்பாடி பழனிச்சாமியை உட்கார வைத்தார். ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணியில் இருந்து வாபஸ் பெற்றார். எதற்காக வாபஸ் பெறுகிறாய் என காரணம் கேட்டதற்கு கூறவில்லை. நான்கரை ஆண்டுகளில் துரோகத்தை செய்துவிட்டு கொஞ்சம் கூட நன்றி இல்லாமல் விலகினார். 
 
எடப்பாடி பழனிச்சாமி நான்கரை ஆண்டுகள் யாரால் ஆட்சி செய்தார் என்பது எனக்கு தெரியும். தமிழக அமைச்சர்கள் எப்படி எல்லாம் பேசி  திட்டங்களை பெற்று வந்தார்கள் என்பதும் எனக்கு தெரியும். இதற்கு கொஞ்சம் கூட நன்றி வேண்டாமா??? 
 
கடந்த பத்து ஆண்டுகளில் நரேந்திர மோடி அவர்கள் கொடுத்த ஆட்சி, இந்த ஆட்சி போல் எந்த ஆட்சியும் இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளது. அவரது ஆட்சி தொடரும் என பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்