மோடி அவர்கள் தமிழக முதல்வரிடம் பாடம் கற்க வேண்டும்- காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பேச்சு..

J.Durai

வியாழன், 4 ஏப்ரல் 2024 (14:23 IST)
கோவை கணபதியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில்,  கோவை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவு தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பேசுகையில்;- 
 
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் எழுச்சியோடு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டார்கள்.கோயம்பத்தூர் சொந்த ஊராக கொண்ட  வேட்பாளர் ராஜ்குமார் அவர்கள், அமைதி புயலாக இருந்தார். இந்த பாசிச சக்திகளை அகற்றுவதற்காக பாராளுமன்றத்தில் சூறாவளி புயலாக மாறப் போகிறார்.
 
நம்முடைய அருமை சகோதரர் தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு டிஆர்பி ராஜா அவர்கள் பதவியேற்றதிலிருந்து தமிழகத்தில் எப்படிப்பட்ட தொழில் புரட்சி நடக்கிறது என்பதை நாடறியும். முதலமைச்சரோடு ஜப்பான் போன்ற வெளிநாடு பயணங்களுக்கெல்லாம் சென்று அன்னிய முதலீடுகளை எடுத்து வந்த பெருமை தமிழ்நாட்டுக்கு சேரும் அதை செய்து முடித்தவர்  முதலமைச்சர் உடைய வழிகாட்டுதலோடு நம்முடைய தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா அவர்கள் ஒரு இளைஞர். 
 
யாரை இந்த மாவட்டத்தில தேர்தல் பணிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் தளபதி அனுப்பி இருக்கிறார் என்றால் வென்று வா என்றால் வேரோடு வெட்டி வருபவர் நம்முடைய அமைச்சர் டி ஆர் பி ராஜா நம்பிக்கையோடு ஒப்படைத்து இருக்கிறார். சிறிய வயதில் இருந்தே அவர் எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி பெற்று இருக்கிறது.
 
இந்த தேசத்தில் ஜனநாயகம் நிலைத்திருக்க வேண்டுமா? சர்வதிகாரம் கைப்பற்ற வேண்டுமா? இரண்டு செய்தி தான் இந்த நாட்டில் இருக்கிற கேள்வி. ஜனநாயகத்தை வீழ்த்துவதற்கு ஒரு பாசிச சக்தி முயற்சி செய்து கொண்டிருக்கிறது.  அந்த பாசிச சக்தி உடைய தொங்கு சதை தான் கோயம்புத்தூரில் நமக்கு எதிராக நிற்கிறது. ஜாதி மோதல் மதமோதல் வந்தது. இந்த ஆர் எஸ் எஸ் என்ற பாசிச அமைப்பு வருவதற்கு முன்பு இந்த தேசம் அமைதி பூங்காவாக இருந்தது. எங்கெல்லாம் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் போகிறதோ, அதனுடைய முகமூடியா இருக்கிற பாஜக செல்கிறதோ அங்கெல்லாம் மதக் கலவரம் நடக்கும். அங்கு எல்லாம் சாதி கலவரம் நடக்கும். அமைதி பூங்காவன தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற துடித்துக் கொண்டிருப்பவர்கள் யார்? இன்னும் பாசிச விஷத்தை விதைப்பவர்கள் யார்? ஜனநாயகம் வெல்ல வேண்டும். பாசிசம் அழிய வேண்டும் அதற்காக உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். 
 
மோடி பத்து ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதி என்னென்ன? ஒவ்வொரு வங்கி கணக்கிலும் 15 லட்சம்,  இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, பெட்ரோல் - டீசல் விலை பாதியாக குறைப்பு, நிகரான பொருளாதாரமாக மாற்றுவேன். சிலிண்டர் விலை 420 ரூபாய்யிலிருந்து,  பாதியாக குறைப்பார் என கூறினார்கள் அதை செய்ய முடியவில்லையே என  மன்னிப்பு கேட்கிறோம் என  என்னைக்காவது சொன்னாங்களா? ஆனால் நம்முடைய ஆட்சி நடக்கிறது. இங்க மக்களாட்சி நம்முடைய தளபதி முதலமைச்சராக அவர்கள் கொடுத்த வாக்குறுதியை இரண்டு ஆண்டுகளில் 80 சதவீத விழுக்காடு நிறைவேற்றி இருக்கிறார். 
 
ஒரு மன்னன் ஒரு அரசன் எப்படி வாழ்ந்தான் என்று சங்க இலக்கியத்தில் நாம் படித்திருக்கிறோம். மக்களுடைய மனசாட்சியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்படி மக்கள் மனசாட்சியாக வாழ்கின்றவர் நம்முடைய முதல்வர் தளபதி  ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் ஒரு வருடம் கொரோனா பெரும் தொற்று அதை சமாளித்தார்.  நூறாண்டுகள் காணாத மழை வெள்ளப்பெருக்கு, அதையும் சமாளித்தார். இதற்கு இடையிலே ஆட்சி பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ஒப்படைக்கும் பொழுது கஜானா காலி, நிதி மேலாண்மை தெரியாது. மோடி அவர்களே நீங்க நேராக வந்து எங்க முதலமைச்சர் தளபதி கிட்ட வந்து ஒரு ஆட்சி எப்படி இருக்கணும் ஒரு ஆட்சி எப்படி நடக்குனுனு  கத்துக்குங்க என்றவர், 
 
நான் மட்டும் முதல்வனாக இருந்தா போதாது,   ஒவ்வொரு  வீட்டிலும் ஒருவன் முதல்வராக இருக்க வேண்டும். என  நான் முதல்வன் திட்டம் நம்முடைய பெண்கள் கல்வியில் முன்னேற வேண்டும் பெண்கள் கல்வியை முன்னேற்றத் தான் ஒரு நாட்டினுடைய தலைநிமிர வேண்டும் என்று நினைத்து, புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்தார். 
 
கல்லூரி மாணவிகளுக்கு மாதம் மாதம் ஆயிரம் ரூபாய், எங்கு பார்த்தாலும் கோயம்புத்தூர் இன்னுயிர் காப்போம் 48 கொண்டு வந்தார். நமக்கெல்லாம் என்ன பெருமை என்றால், எந்த மாநிலத்தில் பிறந்தவனாக இருந்தாலும் எந்த நாட்டில் பிறந்தவனாக இருந்தாலும், தமிழ்நாட்டில் விபத்து என்றால் நான் இருக்கிறேன் என்று இன்னுயிர் காப்போம் 48 கொண்டு வந்து உயிர்களை காப்பாற்றினார். இந்தியாவிலே உயிரிழப்பு தமிழ்நாட்டில் இந்த திட்டத்திற்கு பிறகு பாதியாக குறைந்திருக்கிறது.  மோடி அவர்கள் இதுபோல சொல்ல முடியுமா?
 
தமிழ்நாட்டு உரிமையை பறிப்பதற்கு துணை போனவர் எடப்பாடி. 
 எடப்பாடியிடமும்,  மோடியிடமும்  ஏமாந்து விடக்கூடாது. இந்த நாட்டை காப்பாற்றுகின்ற பொறுமை, பெருமை அனைத்து மக்களுக்கு இருக்கிறது. இந்த 18 வது மக்களவைத் தேர்தல் என்பது ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டிய தேர்தல்..  மோடியுடைய  நண்பர் அதானி  10 ஆண்டுகளுக்கு முன்பு பணக்காரராக இருந்தார்.இப்போது,  உலக அளவில, மோடி ஆட்சியில் 13வது இடத்தில் இருக்கிறார். எங்கு பார்த்தாலும் போதை பொருள் எங்கிருந்து வருகிறது . கட்டுப்படுத்த முடியாதா ?  குஜராத்தில் இருக்கிற துறைமுகத்திலிருந்து கிருஷ்ணா பட்ட துறைமுகம் இந்த ரெண்டு துறைமுகமும் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கு?  இங்க இருந்து ஏற்றுமதி பண்றாங்க இறக்குமதி பண்றாங்க. இந்த நாட்டை குட்டிச்சுவராவதற்காக பாஜக துடித்துக் கொண்டிருக்கிறது. என் அருமை பெரியோர்களே தாய்மார்களே இந்த தேசத்தை பாதுகாக்கின்ற ஒவ்வொரு பெருமையும் கோயம்புத்தூர் மக்களிடம் இருக்கிறது. இப்போது, வந்திருக்கிறார்கள் ஒருபோதும் நாம் இடம் கொடுக்கக் கூடாது. நம் நாட்டை காப்பாற்ற வேண்டும். அந்த கடமையும் பொறுப்பும் நம்மிடம் இருக்கிறது. என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
 
அண்ணாமலை சொல்கிறார். என் மனைவி என்னைய விட ஒரு வருஷம் ஜூனியர். ஆனா நாங்க வந்து திருமணம் பண்ணிட்டோம். நாங்க எந்த ரிசர்வேஷனிலும் வரவில்லை என்றார்.  அந்த வாய் இன்னொரு வாய. நான் 1980 ஆம் ஆண்டு நான் ஐபிஎஸ் ஆக தேர்வு பெற்றேன் ஓ பி சி கேட்டகிரியில் இணைத்த தேர்வு கொடுத்தார்கள் என்கிறார் இது இன்னொரு வாய்.பொய்யாக பேசுபவர் அண்ணாமலை. 100 முறை மோடி தமிழ்நாட்டுக்கு வந்தாலும் எதுவும் செய்ய முடியாது. மோடி  எடுப்பவர், எங்களுடைய முதலமைச்சர் கொடுப்பவர்.  திறமையாக ஆட்சி செய்து மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். எடுப்பவருக்கும் கொடுப்பவருக்குமான தேர்தல், பாசிசத்திற்கும் ஜனநாயகத்திற்கும் ஆன தேர்தல். இந்த தேர்தல் இந்த தேசத்தின் மிக மிக முக்கியமான தேர்தல். அண்ணாமலை  உன்னுடைய தொகுதியில் வந்து சொல்கிறேன் வெச் பேங்க் ஒன்னு சொல்றாங்க, நாளைக்கு கேளுங்க தமிழ்நாடு காங்கிரஸ் கம்பெனி தலைவர் பேசுனாரு வெஜ் பேங்க் ஆப் அது  அது என்ன என்று,  அன்னை இந்திராகாந்தியை பார்த்து கேட்கிறார்கள் கட்சி தீவை தாரை வார்த்து கொடுத்து விட்டார் என்று, அந்த அம்மா ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கும் போதும்  இந்த தேச நலனுக்காகவும், இந்த நாட்டோட முன்னேற்றத்திற்காக வாழ்ந்தவர். இந்த தேசத்திற்காக தன்னுயிரை நீத்த  பெண்மணி  என்ற உலக தலைவர்களால் அழைக்கப்பட்டவர். புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பைச் சட்டத்தால் பிரதமராக உட்கார்ந்து இருக்க மோடியும், கிண்டல் அடிக்கிறாங்க கேலி பேசுறாங்க, இதை சகித்துக் கொள்வார்களா?  என்ன அந்த கடல் அமைப்பு கடல் மேலாண்மையில் நான் என்ன கனிம மேலாண்மை இதெல்லாம் அண்ணாமலையை படிக்க சொல்லுங்க,  புத்தகங்கள் நான் தருகிறேன்.
 
தலைவர் மோடி அவர்களே,  எண்ணை வளம் குவிந்திருக்கிறது. கன்னியாகுமரியில் இருந்து, 50 மயில் , கொழும்பிலிருந்து 150 மயில் .இதுக்கு இடையில இந்தியா எல்லையில் உலகத்துல இல்லாத கனிம வளங்கள் கடல் வளங்கள் எல்லா மேலாண்மை இருக்கு உலகத்திலேயே இல்லாத சொத்துக்கள் பூமிக்கடையில் இருக்குன்னு சொல்லி இருக்கிறான் அண்ணாமலை அவர்களே உங்களை எச்சரிக்கிறேன். நான் பேசினால்,  கொச்சையா போய்டும், நாவடக்கத்தோடு பேசுகிறேன் ஜவர்கலால் நேரு அவர்கள் படிக்கும் பொழுது லண்டனில் கல்லூரியில் ரோல்ஸ் ராய் கார் நான்கு வாயில்களிலும்  தன்னுடைய மகளை அழைத்து வர நிற்கும். மகனுடைய துணியை கப்பலிகளை அனுப்பி லண்டனிலே சலவை செய்து கொண்டு வருபவர். அப்படிப்பட்ட குடும்பத்தை போயி  தாரை வார்த்துட்டாங்கனு சொல்வதா? இந்த தேசத்திற்காக வாழ்கின்ற ஒரு குடும்பம் இருக்கின்றது என்றால்  அது எங்களுடைய இந்திரா காந்தி குடும்பம் என்பது மறந்துவிடக்கூடாது. அண்ணாமலை அவர்களே எச்சரிக்கிறோம், யாரை வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்து விடாதீர்கள்,  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இந்த தேசத்திற்காக தியாகம் செய்த குடும்பம்.  கர்நாடகா சென்று எதற்காக நீங்கள் வேலையை விட்டீர்கள் என்பதெல்லாம் நாங்க எடுக்க கூடும், அப்புறம் எதற்காக இந்த கட்சியில் சேர்ந்திருக்கீங்க, எத்தனை முறை உண்மைக்கு புறம்பாக பொய் பேசுகிறீங்கனு  எடுப்போம். நாகரீகமா சொல்ற நாவடக்கத்தோடு பேச கற்றுக் கொள்ளுங்கள் உண்மையை பேச கற்றுக் கொள்ளுங்கள்.  இந்த நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சி நாங்க,  40 ஆண்டுகளாக உன்னுடைய கட்சி, தேசிய கொடியை ஏத்தாதவர்கள், உங்கள்  மூதாதையர்கள். நாடாளுமன்ற வாக்காளர் பெருங்குடி மக்களே சரியான பாடம் புகட்ட வேண்டும். 
 
இந்த பிரிவினைவாதிகளை, பிரிவினை சக்திகளை பாசிச சக்திகளை நாம் தோற்கடிக்க வேண்டும். எடப்பாடியும், மோடி அணியும் டெபாசிட் வாங்க கூடாது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற வாக்குகளை விட இரண்டு மடங்கு வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற வேண்டும். கோயம்புத்தூரில் அளிக்கின்ற ஒவ்வொரு வாககுகளும் இந்த தேசத்தை பாதுகாக்கின்ற வாக்குகளாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்