மத்திய சென்னை தொகுதியில் மீண்டும் போட்டியிட தயாநிதி மாறன் எம்.பி, மாவட்ட செயலாளர் சிற்றரசு தலைமையில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருந்தார். மேலும் வட சென்னை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதன் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்.பி இன்று விருப்ப மனு தாக்கல் செய்தார். கனிமொழி மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட வேண்டும் என அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் விருப்ப மனுக்களை சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.