எனது முதல்வரை முடிவு செய்ய நீ யார்? நடிகர் அனுமோகனிடம் கேள்வி எழுப்பிய குடிமகனால் சலசலப்பு!

J.Durai

வியாழன், 11 ஏப்ரல் 2024 (14:05 IST)
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்களான திரைப்பட இயக்குனர் ஆர். வி. உதயகுமார், நடிகர் அனுமோகன், நடிகர் ரங்கநாதன் ஆகியோர் பள்ளிபாளையம் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய பகுதிகளான காவேரி ஆர் எஸ், ராஜம் தியேட்டர் பகுதிகள் மற்றும் குமாரபாளையம் நகர பகுதியான பள்ளிபாளையம் பிரிவு சாலை உள்ளிட்ட இடங்களில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நட்சத்திர பேச்சாளர்கள் வாக்குகளை சேகரித்தனர். 
 
மின்சார கட்டண உயர்வு சொத்துவரி உயர்வு குடிநீர் வரி உயர்வு விலைவாசி உயர்வு என அனைத்திற்கும் திமுக அரசே காரணம் எனவும் நீட் தேர்வு விளக்கு தருவதாக பொய் கூறி ஒவ்வொரு முறையும் வாக்குறுதி தருகிறார்கள் அதனால் பல குடும்பங்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும்  வீட்டு வரி உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனுமோகனும் ரங்கநாதனும் அவர்களது உரையாடல்கள் மூலம் திமுக ஆட்சியில் தற்போது அவல நிலையில் மக்கள் இருப்பதாக கூறியும் அவர்கள் குடும்ப அரசியல் செய்ததாகவும் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து விட்டதால் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
 
எடப்பாடி ஒருவரே தமிழகத்தில் முதல்வராக இருக்க தகுதி வாய்ந்தவர் எனவும் கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
 
அப்போது கூட்டத்தில் குறுக்கிட்ட குடிமகன் எனது முதல்வரை முடிவு செய்ய நீ யார் என அனுமோகனிடம் கேள்வி எழுப்பி கூச்சலிட்டதால் கட்சித் தொண்டர்கள் கூட்டத்திலிருந்து குடிமகனை அப்புறப்படுத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்