இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் நான்கு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள 3 கட்ட தேர்தல் மே 21 ஆம் தேதி வரை நடக்க இருக்கின்றன. இந்நிலையில் ரமலான் மாதம் மே 5 ஆம் தேதி தொடங்க இருப்பதால் இஸ்லாமியர்கள் அதிகமுள்ள பகுதிகளில் தேர்தல் நடந்தால் நோன்புகள் பாதிக்கப்படும் என்பதால் மீதமுள்ள 3 கட்ட வாக்குப்பதிவுகளை முன்கூட்டியே நடத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.