அதிமுக கூட்டணியில் முதல் ஆளாக இடம்பிடித்த பாமக, அக்கூட்டணியில் 7 மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை பெற்றது. இந்த நிலையில் பாமகவுக்கு அதிமுக கூட்டணியில் தருமபுரி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய ஏழு தொகுதிகளை ஒதுக்கியது
இந்த நிலையில் இந்த ஏழு தொகுதிகளில் தற்போது ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாமக தலைவர் ஜிகே மணி வெளியிட்டுள்ளார். மீதி இரண்டு தொகுதி வேட்பாளர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று பாமக வட்டாரங்கள் கூறுகின்றன. தருமபுரி தொகுதியில் மீண்டும் பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி போட்டியிடுகின்றார்.