ஆனால், ஊடகங்களில் வெளியான தகவல்களை மறுத்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், வேலூரில் தேர்தலை நிறுத்துவது தொடர்பாக இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
இதை தொடர்ந்து இப்போது வருமான வரித்துறை வேலூர் தொகுதி தேர்தல் ரத்து குறித்து விளக்கம் அளித்துள்ளது. வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, வேலூர் தொகுதி தேர்தல் ரத்து குறித்து வருமான வரித்துறை சார்ப்பில் எந்த பரிந்துரையும் மேற்கொள்ளப்படவில்லை. வருமான வரித்துறை எப்போதும் தேர்தல் ரத்து குறித்து எந்த பரிந்துரையும் செய்வதில்லை.
அதேபோல், இதுவரை வேலூரில் நடந்த வருமான வரி சோதனை குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் ஐந்து முறை சமர்பித்துள்ளோம். சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் உண்மை தகவல்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.