அதிமுக அரசைக் கடுமையாக விமர்சித்த பாமக அதனுடனேயேக் கூட்டணி வைத்தது கடுமையான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் ஏழு மக்களவை தொகுதிகளை பெற்ற பாமகவின் ராமதாஸ் தற்போது தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசியதாவது.
இதையடுத்து வாக்கு சேகரித்துப் பேசிய அவர் ‘தைலாபுரம் தோட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையை வைத்து அதை திருமா வளவனைத் திறக்க வைத்தேன். சமுதாயத்திற்கு பயன்படுவார் என்றெண்ணி, மதுரையில் இருந்த அவரை இங்கே கொண்டு வந்து அறிமுகம் செய்தேன். அவரை இன்று ஊடகங்கள் இன்று ஒரு தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளன என்றால் அதற்குக் காரணம் நான்தான். அது என்னுடைய தவறுதான்’ எனக் கூறியுள்ளார்.