கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவைத் தொகுதி இம்முறை சிறப்புக்கவனம் பெற்ற தொகுதியாக மாறியுள்ளது. அதற்கு முக்கியக் காரணம் முதன் முதலாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தென் இந்தியாவில் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதே ஆகும். அவரை எதிர்த்து பாஜக சார்பில் கூட்டணி கட்சியான பாரத் தர்ம ஜன சேனா கட்சியின் துஷார் வெள்ளப்பள்ளி போட்டியிடுகிறார்.
இதையடுத்து 3 ஆவது கட்ட வாக்குப்பதிவை அடுத்து இன்று கேரளாவில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் வயநாடு தொகுதிக்குட்பட்ட சிஎம் எஸ் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. அங்குள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருமுறை பட்டனை அழுத்தினாலும் வாக்கு பதிவாகவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வாக்குப்பதிவில் சிக்கல் எழுந்துள்ளது.