இன்று தருமபுரியில் உள்ள அரூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை நடைபெற்றது. அப்போது தருமபுரி மக்களவைத் தொகுதியில் வேட்பாள் ருக்மணி தேவியையும், அரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திலீப் பாப்பிரட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரான சதீஸ் ஆகியோருக்கு ஆதரவாக சீமான் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் ஹட்ரோ கார்பன், நெடுவாசல்,விவசாயம் பாதிப்பு ஆகியற்றிற்கு தற்சமயம் ஆட்சியில் இருப்போர் ஒருமுறை கூட வந்து மக்களைப் பார்க்கவில்லை. ஒட்டுக்கு பணம் கொடுக்க வருவார்கள். அதனால் பணத்துக்கு ஓட்டுப்போட வேண்டாம்.