காரணம், இந்தப் படத்தைத் தயாரிக்கும் நிறுவனம்தான், இளைய தளபதியை வைத்து இளம் இயக்குநர் எடுக்கும் படத்தையும் தயாரிக்கிறது. ஆனால், போட்ட பட்ஜெட்டைவிட எக்கச்சக்கமாக பில் வந்துவிட்டதாம். இதில், சென்னையில் வேறு ஒரு ஷெட்யூல் பாக்கியிருக்கிறது. எனவே, பிரமாண்ட படத்துக்கு வைத்திருந்த காசைத்தூக்கி தளபதி படத்தில் போட்டுவிட்டார்களாம்.
இதனால், பிரமாண்ட படம் எப்போது தொடங்கும் என்பது சிதம்பர ரகசியமாகவே இருக்கிறது. எனவேதான், கால்ஷீட்டை வீணாக்க வேண்டாமென படத்தில் இருந்து விலகினாராம் நடிகை. இதற்காக, பயிற்சியாளரை வைத்து வாள் சண்டையெல்லாம் கற்றவரல்லவா? அவர் கோபப்படுவதிலும் நியாயம் இருக்கத்தானே செய்யும்?