இரண்டெழுத்து இயக்குநரின் படத்தில் நான்காவது முறையாக நடிக்க இருக்கிறார் தல. ஒருவரைப் பிடித்துவிட்டால், அவரை விட்டு விலக மாட்டார் தல. அந்த அடிப்படையில்தான் இயக்குநருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
இயக்குநரைப் போலவே ஒளிப்பதிவாளருக்கும் தலயுடன் இது நான்காவது படம். ஆனால், இரண்டாவது படத்தில்தான் வந்து சேர்ந்தார் ஒல்லி இசையமைப்பாளர். அந்தப் படத்தில் அவர் போட்ட பாடல்கள் நன்றாக இருந்தாலும், அடுத்த படத்தில் போட்ட பாடல்கள் கவரும்படி இல்லை.
எனவே, புதிய படத்தில் ஒல்லி இசையமைப்பாளரைக் கழற்றி விட்டுவிட்டார்களாம். அவருக்குப் பதிலாக ராகதேவனின் இசை வாரிசை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். சிறிய இடைவேளைக்குப் பிறகு களமிறங்கியிருக்கும் வாரிசு, நிச்சயம் சூப்பர் ஹிட் பாடல்களாகக் கொடுப்பார் என்று நம்புகிறார்கள் தல ரசிகர்கள்.