‘ஒரு உதவி...’ என்று நள்ளிரவில் கூட யாராவது வந்து கதவைத் தட்டினால், உடனே போய் நடித்துக் கொடுத்துவிட்டு வரும் நல்ல மனசுக்காரர் சேது நடிகர். நட்புக்காகவே அவர் நடித்த படங்கள் ஏராளம். ஆனால், அவரை அறிமுகப்படுத்திய இயக்குநருக்கு மட்டும் பாராமுகம் காட்டுகிறார் என்கிறார்கள்.
சேதுவை அறிமுகப்படுத்திய சாமி இயக்குநர், அடுத்ததாக சேதுவை வைத்து எடுத்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை. ஆனால், மூன்றாவதாக இணைந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. நான்காவதாகவும் ஒரு படத்தில் இணைகிறோம் என்று அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார் இயக்குநர்.
ஆனால், ‘யாரைக் கேட்டு அப்படிச் சொன்னீர்கள்?’ என்று கோபப்பட்ட சேது நடிகர், கால்ஷீட் தரமுடியாது என்று கூறிவிட்டாராம். எனவேதான், வாரிசு நடிகரை வைத்து ஷூட்டிங் போயிருக்கிறார் சாமி இயக்குநர் என்கிறார்கள்.