மில்க் நடிகை திடீரென இப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு, இதற்கு கால்ஷீட்தான் பிரச்சனை என்று ஒரு பதிலையும் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் உண்மையில் கால்ஷீட்தான் பிரச்சனையா என்று கோலிவுட் வட்டாரத்தில் பெரிய கேள்வியாக இருந்தது.
ஒல்லி நடிகரின் படத்தில் தொடர்ந்து மில்க் நடிகையை நடிக்க வைப்பதால் இரண்டு பேரையும் இணைத்து நிறைய வதந்திகள் பரவத் தொடங்கியது. இதனால் வெகுண்டெழுந்த ஒல்லியின் மனைவி, இந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட படத்திலிருந்து நீக்க சொன்னது மட்டுமல்லாமல், மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திலுருந்து மில்க் நடிகை நீக்கப்பட்டார் என்று சொன்னால் அது பெரிய விஷயமாக பேசப்படும் என்று நினைத்த படக்குழு அவர் விலகிவிட்டதாக கூறினார்களாம்.