'பாகுபலி 2' என்ற ஒரே படத்தால் உலகப்புகழ் பெற்றார் நடிகை அனுஷ்கா, ஆனால் இந்த புகழெல்லாம் நயனுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டியது. ராஜமெளலி கூப்பிட்ட சமயத்தில் காதல் மற்றும் கால்ஷீட் குழப்பத்தால் பாகுபலியில் நடிக்க மறுத்துவிட்டார்
இதனால் 'சங்கமித்ரா'வில் நடிக்க நயன் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்திற்காக கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டும். வாள்சண்டை, குதிரையேற்றம், மண்ணில் புரள வேண்டும் ஆகியவை நயன் முன் நிற்கும் சவால். ஆனால் கோடிகள் கொட்டும்போது மண்ணில் புரள கசக்கவா செய்யும் என்று கூறுகின்றனர் கோலிவுட்டினர்.