கூட்டி கழிச்சுப் பார்த்தா கணக்கு சரியா வரும்…

வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (13:40 IST)
‘கல்யாண வீட்ல கல்கண்டாவும் நாந்தான் இருக்கணும், கருமாதி வீட்ல கருப்புக் காப்பியாவும் நாந்தான் இருக்கணும்’ என்பது  சிலரின் மனநிலை. ஒலக நாயகனும் அந்த வகையைச் சேர்ந்தவர்தான். போன வருஷம் அவர் படம் ஒன்றுகூட ரிலீஸாகவில்லை. போகிற போக்கைப் பார்த்தால் இந்த வருஷமும் ரிலீஸாகாது போலிருக்கிறது. எனவே, தன்னை  லைம்லைட்டில் வைத்துக்கொள்ள படாதபாடு படுகிறார்.

 
டி.வி. நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கும் ஒலக நாயகன், ட்விட்டரிலும் புரியாத மாதிரி ஸ்டேட்டஸ்களைப் போட்டு  அவரைப் பற்றிப் பேசவைத்து விடுகிறார். எப்போதோ எடுத்த படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தற்போது  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நேற்று தன்னுடைய உதவியாளர் மூலம் ட்விட்டரில் அறிவிப்பு வெளியிடச் செய்தார். 
 
இந்நிலையில், தினமும் புதிய இயக்குநர்களை அழைத்து கதை கேட்கிறார்களாம். இது அவருக்கு அல்ல. கதை நன்றாக  இருந்தால், அவருடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கப் போவதாகச் சொல்கிறார்களாம். புதுமுகம் அல்லது  அவரில்லாமல் மற்ற பிரபலங்களை வைத்து எடுக்கும் ஐடியா இருக்கிறது என்கிறார்களாம். இதனால், ஆழ்வார்பேட்டையிலுள்ள  அவரின் அலுவலகத்தில் உதவி இயக்குநர்களின் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டி கழிச்சுப் பாருங்க… கணக்கு சரியா வரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்