இந்த வீடியோவை சுமார் 12.7 கோடி பேர் பார்த்துள்ளனர், 22 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர், சுமார் 1.1 கோடி பேர் டிஸ்லைக் செய்துள்ளனர். இதில் ஹை லைட் அந்த டிஸ்லைக்தான்.
ஆம், யூடியூப் வரலாற்றில் இதுவரை அதிகம் பேர் டிஸ்லைக் செய்த வீடியோவாக இது இருக்கிறது. இதற்கு முன்னர் ஜஸ்டின் பீபர் பதிவேற்றம் செய்த பேபி மியூசிக் வீடியோ அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.