வாட்ஸ் அப் குரூப்பில் இனி யாரையும் எளிதில் சேர்க்க முடியாது ?

புதன், 3 ஏப்ரல் 2019 (17:00 IST)
வாட்ஸ் அப் பயனாளர்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.  இதன் பயனாளர்களுக்கு ஏற்ப பலபுது அறிவிப்புகளையும் இந்நிறுவனம் அறிவித்து வருகிறது. இந்நிலையில்  வாட்ஸ் அப் செயலில் புது பிரைவசி செட்டிங் ஆப்சன் தரப்பட்டுள்ளது.
இதனைப் பயன்படுத்தி க்ருப்பில் பயனாளர்கல் சேர்வதை அவரவர் தாமாகவே முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது இந்த வாய்ஸ் அப் பிரைவசி செட்டிங்கில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் நாம் யாரை குரூப்பில் சேர்க்க வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும்.
 
இதை எவ்வாறு செயல்படுத்துவது எனில் அக்கவுண்ட் - பிரைவசி - க்ரூப்ஸ் ஆப்சனை தேர்வு செய்து கொண்டு நோபடி, மை காண்டாக்ட்ஸ், அல்லது எவரி ஒன் என் மூன்று ஆப்ஷனில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
 
இதில் நோபடி ஆப்சனை தேர்வு செய்யும் போது நான் இணைக்கப்படும் குரூப்பில் அனுமதி அளித்தால் இணையலாம். நமது காண்டாக்ட் லிஸ்டுல் உள்ளவர்களுன் மட்டுமே க்ரூப்களில் சேர்க்கும் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது. 
இந்தக் குரூப்பில் சேர்க்க முயன்றால் அவருக்கு தனிப்பட்ட முறையில் அழைபு விடுக்க கோரும்,. இதனையடுத்து பயனாளருக்கு வரும் இன்வைட்களுக்குப் பதில் தர 3 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். இதனையடுத்துத் தானாகவே இன்வைட் காலாவதியாகிவிடும்.
 
இப்புதிய வசதியின் மூலம் க்ரூப் மெசஜ்களை கட்டுக்குள் வைக்கமுடியும். மேலும் இந்த வசதி வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு இன்று முதல் அளிக்கப்படவுள்ளதாகவும் தகவல்  தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்