இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகமான ஸ்மார்ட்போன் மாடல்களை விற்று வரும் நிறுவனம் சாம்சங். இந்தியாவில் உள்ள பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கான டிமாண்டை பொறுத்து பல நிறுவனங்களை போல சாம்சங் நிறுவனமும் பல பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. அவ்வாறாக புதிதாக அறிமுகமாகியுள்ள ஸ்மார்ட்போன் தான் Samsung Galaxy A05s.
Samsung Galaxy A05s ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
-
6.7 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே
-
குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 680 சிப்செட்
-
ஆக்டாகோர் ப்ராசஸர்
-
ஆண்ட்ராய்டு 13
-
6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம்
-
128 ஜிபி இண்டெர்னல் மெமரி
-
1 டிபி வரை நீட்டிக்கக்கூடிய மெமரி ஸ்லாட்
-
5000 mAh பேட்டரி, 25 W ஃபாஸ்ட் சார்ஜிங்,
இந்த Samsung Galaxy A05s ப்ளாக், லைட் க்ரீன், லைட் வயலெட் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த Samsung Galaxy A05s ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999 ஆகும். இது 4ஜி வரை மட்டுமே சப்போர்ட் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.