விரிச்சா Tab.. மடக்குனா Phone..! சாம்சங்கின் புதிய Samsung Galaxy Z Fold 6! - சிறப்பம்சங்கள் என்ன?

Prasanth Karthick

வியாழன், 11 ஜூலை 2024 (15:47 IST)
சாம்சங் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு நீண்ட காலமாக எதிர்பார்ப்பில் இருந்த Samsung Galaxy Z Flip 6 மற்றும் Samsung Galaxy Z Fold 6 ஸ்மார்ட்போன்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.



உலக அளவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி சந்தையில் முன்னிலை வகிக்கும் நிறுவனம் சாம்சங். ஆண்டுதோறும் பல மாடல் ஸ்மார்ட்போன்கள், எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களை வெளியிடும் சாம்சங் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை நேற்று வெளியிட்டது. அதில் பெரும்பாலோனாரால் எதிர்பார்க்கப்பட்ட Samsung Galaxy Z Flip 6 மற்றும் Samsung Galaxy Z Fold 6 ஸ்மார்ட்போன்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Samsung Galaxy Z Fold 6 மாடலானது இடமிருந்து வலம் மடிக்கும் வகையில் உள்ளது. விரிந்த நிலையில் ஒரு Tab அளவுக்கு அகலமாகவும், மடித்த நிலையில் ஒரு ஸ்மார்ட்போன் அளவிலும் இது இருக்கும். இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்ப்போம்.



Samsung Galaxy Z Fold 6 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
 

இந்த  Samsung Galaxy Z Fold 6 ஸ்மார்ட்போன் சில்வர் ஷேடோவ், பிங்க், நேவி ஆகிய 3 வண்ணங்களில் நார்மல் எடிஷனாக கிடைக்கிறது. க்ராப்டட் ப்ளாக், வொயிட் ஆகிய வண்ணங்கள் லிமிடெட் எடிஷனாக அறிமுகமாகியுள்ளது.

இதன் 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.1,64,999 ஆகவும், 12 ஜிபி + 512 ஜிபி மாடலின் விலை ரூ.1,76,999 ஆகவும், 12 ஜிபி + 1 டிபி மாடலின் விலை ரூ.2,09,999 ஆகவும்நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூலை 24 முதல் இந்த மாடல் ஸ்மார்ட்போன்களின் விற்பனை தொடங்கும் நிலையில், இன்று முதல் முன்பதிவுகள் தொடங்கியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்