ரெட்மிக்கு போட்டியாக பட்ஜெட் விலையில் எம்சீரியஸ் மொபைல்கள்: சாம்சங் அதிரடி

செவ்வாய், 29 ஜனவரி 2019 (11:26 IST)
ரெட்மி, ரியல்மி வருகைக்கு பின் மிகப்பெரிய அளவில் வாடிக்கையாளர்களை இழந்தது சாம்சங் மொபைல் நிறுவனம்.



இதனால் மற்ற நிறுவனங்களைப் போல் குறைந்த விலையில் நிறைய வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு கொண்டு வந்து வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் சாம்சங் நிறுவனமும் இறங்கியுள்ளது.  எம் சீரியசில் மொபைல் போன்களை சாம்சங் நிறுவனம் நேற்று அறிமுகம் செய்தது   
 
இதில் சாம்சங் கேலக்ஸி M10 மொபைல்  7,990 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. 6.22 இன்ச் இன்ஃபினிட்டி V டிஸ்ப்ளே, 3,400 mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1, 13 + 5 MP டூயல் ரியர் கேமரா மற்றும் 5 MP ஃபிரன்ட் கேமரா மற்றும்  ஃபிங்கர் பிரின்ட் சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆப்ஷன்களும்  உள்ளது. 
 
 2 GB ரேம் + 16 GB மெமரி வேரியன்ட் 7,990 ரூபாய்க்கும், 3 GB ரேம் + 32 GB மெமரி வேரியன்ட் 8,990 ரூபாய்க்கும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதேபோல சாம்சங் கேலக்ஸி M20 மொபைலில்  6.3 இன்ச் இன்ஃபினிட்டி V டிஸ்ப்ளே, 5,000 mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1, 13 + 5 MP டூயல் ரியர் கேமரா மற்றும் 8 MP ஃபிரன்ட் கேமரா USB C போர்ட்டுடன் கூடிய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்பட பல வசதிகள் உள்ளன.  3 GB ரேம் + 32 GB மெமரி வேரியன்ட் 10,990 ரூபாய்க்கும், 4 GB ரேம் + 64 GB இன்டர்னல் மெமரி வேரியன்ட் 12,990 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. 
 
அடுத்த மாதம் 5-ம் தேதி முதல் அமேசான் மற்றும் சாம்சங்கின் இ-ஸ்டோரில் எம் சீரியஸ் மொபைல்கள் விற்பனைக்கு வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்