வாட்ஸ் ஆப் வீடியோ கால்: செயல்படாததற்கான காரணங்கள்!!

வெள்ளி, 18 நவம்பர் 2016 (14:53 IST)
வாட்ஸ் ஆப் தனது புதிய அம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து கொண்டு வருகிறது. அந்த புதிய அம்சங்களின் பட்டியலில் வாட்ஸ்ஆப் வீடியோ அழைப்பும் ஒன்று.


 
 
வாட்ஸ்ஆப் அதன் பீட்டா, ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் போன் ஆகிய அனைத்து பயனர்களையும் சென்றடையும் நோக்கில் வாட்ஸ்ஆப் வீடியோ அழைப்பை வெளியிட்டுள்ளது.
 
ஸ்கைப், பேஸ்டைம், ஐஎம்ஒ ஆகிய வீடியோ காலிங் ஆப்ஸ்களோடு ஒப்பிடுகையில் வாட்ஸ்ஆப் வீடியோ கால் சிறந்த தேர்வாக செயல்படவில்லை. இதற்கான முக்கிய காரணங்கள்....
 
வீடியோ தரம்: 
 
மற்ற வீடியோ பயன்பாடுகளின் அழைப்புகளோடு ஒப்பிடும்போது வாட்ஸ்ஆப் வீடியோ கால் ஒரு மோசமான தரம் கொண்டதாகவே தெரிகிறது. 
 
டேட்டா:
 
மற்ற ஸ்கைப், பேஸ்டைம் உள்ளிட்ட வீடியோ அழைப்பு பயன்பாடுகளோடு ஒப்பிடுகையில் மிக அதிக அளவிலான டேட்டாவை எடுத்துக் கொள்கிறது.
 
போலி வீடியோ கால் இன்விட்டேஷன்:
 
வாட்ஸ்ஆப் வீடியோ கால் இன்விட்டேஷன்களை போல போலி இணைப்பை அனுப்பி வருகின்றன. பீட்டா ப்ளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்வதின் மூலமாகவே எளியதாக இந்த அம்சத்தை பெற முடியும்.
 
2ஜி வேகம்:
 
ஸ்கைப் மற்றும் ஐஎம்ஒ போலல்லாமல், வாட்ஸ்ஆப் வீடியோ அழைப்பு பெரும்பாலும் 2ஜி-யில் வேலை செய்யாமல் போகிறது.
 
வைஃபை:
 
மொபைல் வைஃபை தரவுபயனப்டுத்தி வாட்ஸஆப் வீடியோ கால் நிகழ்த்தினால் ஒரு சில நிமிடங்களில் தரவை நிறைய இழக்க நேரிடும். 

வெப்துனியாவைப் படிக்கவும்