இந்தியா முழுவதும் இணைய பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்டிவி என அனைத்தும் ஸ்மார்ட் சாதனங்களாக மாறி வருகின்றன. இந்நிலையில் பல வீடுகள், அலுவலகங்களும் இணைய சேவையை பெற்று வருகின்றன. இதற்காக BSNL, Airtel, Jio உள்ளிட்ட பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் Wired Fiber மூலம் பல பகுதிகளில் இணைய சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒரு Airtel Xstream AirFiber –ல் சுமார் 64 டிவைஸ்களை கனெக்ட் செய்து கொள்ள முடியும். Plug and Play முறையிலான இந்த Airtel Xstream AirFiber மின்சாரத்தில் இயங்கும். இதில் WiFi 6 அதிவேக தொழில்நுட்பம் உள்ளது. 100 Mbps வேகத்தில் டேட்டா டவுன்லோட் ஸ்பீட் இருக்கும். இதற்கான மாத கட்டணம் ரூ.799 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.2500 டெபாசிட் கட்டணம். தற்போது இந்த சேவை டெல்லி மற்றும் மும்பையில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஏர் ஃபைபர் சேவை விரிவுப்படுத்தப்படவுள்ளது.