ஜியோவின் இலவச மொபைலில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாதா? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

செவ்வாய், 25 ஜூலை 2017 (11:53 IST)
ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ள இலவச ஜியோ போனில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என்ற தகவல் வாடிக்கையாளர்களிடையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஜியோபோன் என்று அழைக்கப்படும் புதிய மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ. இதனை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது.
 
இதற்கான முன்பதிவு ஆகஸ்டு 24ஆம் தேதி தொடங்குகிறது. மொபைல் போன் செப்டம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த மொபைல் போன் இலவசமாக வழங்கப்பட்டாலும் ரூ.1500 இருப்பு தொகை செலுத்த வேண்டும். 3 வருடங்கள் கழித்து இருப்பு தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இந்த ஜியோ போனின் வசதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 4ஜி மொபைல் போனாக இருந்தாலும் இதில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாதாம். ஜியோ சாட் என்ற செயலி மூலம்தான் சாட் செய்ய முடியும். இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
தற்போது உள்ள இந்த நவீன இணையதள உலகத்தில் அனைவரின் மொபைல் போனில் வாட்ஸ்அப் இல்லாமல் இல்லை. பேஸ்புக் சமூக வலைதளத்தை தாண்டி வாட்ஸ்அப் அதிகமாக உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்