Netflix 1M Lose – மீட்க வருமா மைக்ரோசாப்ட்??

புதன், 20 ஜூலை 2022 (09:00 IST)
நெட்ஃபிக்ஸ் முதல் காலாண்டை போல தொடர்ச்சியாக இரண்டாவது காலாண்டில் சந்தாதாரர்களை இழந்ததாக அறிவித்துள்ளது.


இந்தியாவில் பல்வேறு ஓடிடி தளங்கள் மக்களிடையே புழக்கத்தில் இருந்தாலும் அதிகளவில் மக்களால் பயன்படுத்தப்படும் ஓடிடியாக நெட்ப்ளிக்ஸ் இருந்து வருகிறது. பல்வேறு படங்கள், வெப்சிரிஸ் நிகழ்ச்சிகளை வழங்கும் நெட்ப்ளிக்ஸ் தற்போது சரிவை கண்டு வருகிறது.

ஆம், நெட்ஃபிக்ஸ் முதல் காலாண்டை போல தொடர்ச்சியாக இரண்டாவது காலாண்டில் சந்தாதாரர்களை இழந்ததாக அறிவித்துள்ளது. சுமார் 10 லட்சம் சந்தாதாரர்களை இழந்திருக்கும் இந்நிறுவனம் பங்கு சந்தையிலும் வீழ்ச்சியை கண்டுள்ளது.

பயனர்கள் தங்கள் நெட்ப்ளிக்ஸ் கணக்கின் பாஸ்வோர்டை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்வதே இந்த இழப்பிற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய சந்தாதாரர்களை ஈர்க்கும் முயற்சியில், நெட்ஃபிக்ஸ் மைக்ரோசாப்ட் உடன் இணைந்து விளம்பரங்களை உள்ளடக்கிய மலிவான சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்