ரூ.3,100 கோடிக்கு விலை போன லைகா: பின்னணி என்ன??

செவ்வாய், 3 மார்ச் 2020 (11:32 IST)
ஸ்பெயினின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான மாஸ்மோவில் லைகா தொலைத்தொடர்பு நிறுவனத்தை வாங்கியுள்ளது. 
 
லண்டனை தலைமையிடமாக கொண்டு சர்வதேச அளவில் 23 நாடுகளில் தொலைத்தொடர்பு சேவைகளில் முக்கிய பங்காற்றுகிறது Lyca Mobile Network. கடந்த 2010 ஆம் ஆண்டு ஸ்பெயினில் தனது வர்த்தகத்தை துவங்கிய லைகா, 1.5 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. 
 
இந்நிலையில் திடீரென 100% பங்குகளையும் லைகா, ஸ்பெயினின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான மாஸ்மோவிலிடம் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் லைகா ரூ.3,100 கோடியை பெற்றுள்ளது. இன்னும் சில வருடங்களுக்கு லைகா பெயரிலேயே தொலைத்தொடர்பு சேவை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏன் இந்த திடீர் முடிவு என கேட்கப்பட்டதற்கு லைகா குழுமத்தின் நிறுவன தலைவர் கலாநிதி அல்லி ராஜா சுபாஸ்கரன், நாங்கள் நினைத்ததை சாதித்து விட்டோம். இயன்ற வரை உயர்தரமான, குறைந்த கட்டணத்திலான தொலைத்தொடர்பு சேவையை கொடுத்து விட்டோம் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்