தகவல்கள் திருடப்படாது - உறுதி கொடுத்த வாட்ஸ் ஆப் நிறுவனம்!
திங்கள், 19 ஏப்ரல் 2021 (23:47 IST)
வாட்ஸ் ஆப்பில் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதற்கு வாய்ப்பில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் ஆப் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் பிரைவசி என்று ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் பயனர்களின் விவரங்கள் தகவல்கள் திருடப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகச் செய்திகள் வெளியானதால் மக்கள் பயந்து டெலகிராம் ஆப்பிற்கு மாறினர்.
அத்துடன் சமீபத்தில் சைபர் பாதுகாப்பு அமைப்பான செர்ட் இன் வாட்ஸ் ஆப்பில் தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாகக்கூறியது.
இந்நிலையில் இதுபோல் பயனர்களின் தகவல் திருடப்படாது என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்தது.இந்நிலையில், மென் பொருள்களை நிபுணர்குழு ஆராய்ந்து கண்காணித்து வருவதாகவும், அதனால் தகவல்கள் திருட வாய்ப்பில்லை எனவும் இது பாதுகாப்பானது எனவும் தெரிவித்துள்ளது.