பயனர் விவரங்களை கேட்கும் வாட்ஸ் ஆப் பிங்க்…

திங்கள், 19 ஏப்ரல் 2021 (17:54 IST)
பிங்க் நிறத்தில் வாட்ஸ் ஆப் செயலி அறிமுகம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் ஆப் செயலியை பிங்க் நிறத்தில் பயன்படுத்தலாம் எனக் கூறும் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் இத்தகலுடன் உள்ள லிங்கில் வாட்ஸ் ஆப் பிங்க் செயலியை டவுன்லோடு செய்யக்கூறி அதற்கான ஒரு இணைய முகவரியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதைப் பயன்படுத்தியதும் ஸ்மார் போனிற்கு கேடு விளைவிக்கும் செயலி இன்ஸ்டால் ஆகிவிடும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த செயலிக்கும் வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் அது போலி செயலி ;  வாடிக்கையாளர்களின் விவரங்களைத் திருடத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்