உங்கள் Pendrive வைரஸால் தாக்கப்பட்டுள்ளதா? கவலை வேண்டாம்... இதை படியுங்கள்

புதன், 8 மார்ச் 2017 (20:03 IST)
வைரஸால் தாக்கப்பட்டுள்ள Pendrive-வில் இருந்து வைரஸை அழித்து எளிதாக் அதிலிருக்கும் பைல்களை பாதுகாக்கலாம்.


 

 
தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB Pendrive. இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறு கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக Pendrive-வில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை எளிதி காலி செய்து விடுகிறது.
 
இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து உங்கள் Pendrive-ஐ பாதுகாக்க இதோ எளிய முறை கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உங்கள் பெண்ட்ரைவில் இருந்து எளிதாக வைரஸை காலை செய்து உள்ளே இருக்கும் பைல்களை மீட்டெடுக்கலாம்.
 
தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கியமான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.
 
கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுக்கலாம்.
 
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
 
2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.
 
3) இப்பொழுது Pendrive எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.
 
4) உதாரணமாக E: டிரைவில் Pendrive இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
 
5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.
 
அவ்வளவுதான் உங்கள் Pendrive-வில் இருந்த காலியாகிவிடும். உங்கள் பைல்கள் அனைத்து பத்திரமாக கிடைத்துவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்