விரைவில் கூகுள் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்

வெள்ளி, 8 ஜூலை 2016 (11:41 IST)
மிகவும் பிரபலமான தேடுபொறியான(Search Engine) கூகுள் நிறுவனம் தனது சொந்த தயாரிப்பில் இரண்டு ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை வெளியிட தயாராகிவுள்ளது.



 
கூகுள் உலகளாவிய மக்களால் பயன்படுத்தப்படும் இணையதளமாக உள்ளது. இணையதள இணைப்பை தொடர்ந்து அடுத்த கட்டமாக ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. முதலில் இரு வகையான கைக்கடிகாரங்களை வெளியிட தயாராகி வருவதாக ஆண்ட்ராய்டு போலீஸ் வலைப்பதிவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஸ்வார்டுபிஷ்(Swordfish) மற்றும் ஏஞ்சல்பிஷ்(Anglefish) என பெயரிடப்பட்டுள்ள கைக்கடிகாரங்கள் வட்ட வடிவ டிஸ்ப்லேவை பெற்றிருக்கும். இந்த கடிகாரம் மேலும் கூகிள் ஆண்ட்ராய்டு 2.0 உதவி கொண்டு இயங்கும்.
 
ஸ்வார்டுபிஷ் கைக்கடிகாரம் 42 மிமீ திரையும், ஏஞ்சல்பிஷ் 43.5 மிமீ திரையும், 10.6 மிமீ மெலிதான தோற்றத்தை கொண்டிருக்கும். இதனிடையே கூகுள் நிறுவனம் கைக்கடிகாரங்கள் தயாரிக்க சாம்சங், எல்ஜி, மற்றும் மோட்டோரோலா ஆகிய மூன்று நிறுவனங்களுடன் கூட்டுசேர்ந்து உள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்