ரெக்கை கட்டி பறக்கும் ஜியோ...மூன்று மாதத்தில் இவ்வளவு லாபமா ?

சனி, 1 ஆகஸ்ட் 2020 (22:12 IST)
கொரோனா தொற்று இந்தியாவில் பிப்ரவரியில் பரவ ஆரம்பித்தது. மார்ச் இறுதியில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரியுமாறு கூறினர்.

இதில் பெரும்பாலானோர் தங்கள் இணையதளத் தொடர்புக்கு ஜியோ நெட்வொர்க்கையே பயன்படுத்தினர்.

இதனால் ஜியோ பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில்  ஜியோவில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டு காலத்தில் மட்டும் சுமார் 1 கோடி பயனாளர்கள் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்த மூன்று மாதக் காலத்தில்  183 % ஜியோ வளர்ச்ச்யைப் பெற்றுள்ளது. இதன்மூலம் ரூ.2520 கோடி லாபம் கிடைத்துள்ளதாகவு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்