இளைஞர்களுக்கு ஃபேஸ்புக்கின் புதிய மெசேஜ் அப்

ஞாயிறு, 4 ஜூன் 2017 (20:05 IST)
பெற்றோர்கள் கண்காணிப்புடன் இளைஞர்கள் சாட் செய்ய ஃபேஸ்புக் நிறுவனம் புதிய மெசேஜ் அப் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.


 

 
சமூக வலைதளங்களில் இளைஞர்கள் பெரும்பாலும் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் தெரிந்து கொள்ள முடிவதில்லை. பல பேர் இந்த சமூக வலைதளங்களால் தங்கள் வாழ்க்கையில் பெரும் துயரத்தை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
 
இதனால் டீன்ஏஜ் இளைஞர்களுக்கு தனியாக ஒரு மெசேஜ் அப் ஒன்றை ஃபேஸ்புக் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. 13 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே இந்த ஆப்பை பயன்படுத்த முடியும். ஆனால் இவர்களுக்கு எனறு பேஸ்புக் புரொபைல் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.  

வெப்துனியாவைப் படிக்கவும்