ம‌ெ‌க்கா நக‌ரி‌ல் ல‌ட்ச‌‌க்கண‌க்கான ம‌க்க‌ள்

சனி, 6 டிசம்பர் 2008 (12:27 IST)
சவு‌தி அரே‌பியா‌வி‌ல் உ‌ள்ள மெ‌க்கா நக‌‌‌ரி‌ல் அமை‌ந்‌திரு‌க்கு‌ம் கஅபா பு‌னித இ‌ல்ல‌த்தை தொழுவத‌ற்காக சுமா‌ர் 30 ல‌ட்ச‌‌ம் ம‌க்க‌ள் கு‌‌வி‌ந்து‌ள்ளன‌ர்.

இ‌ந்‌தியா உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு நாடுக‌ளி‌ல் இரு‌ந்து‌ம் ல‌ட்ச‌‌க்கண‌க்கான ம‌க்க‌ள் ஹ‌ஜ் பயண‌ம் மே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

இதனா‌ல் ஹ‌ஜ் பகு‌தி‌யே ம‌க்க‌ள் வெ‌ள்ள‌த்தா‌ல் ‌மித‌க்‌கிறது.

அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிப்பதற்காக அந்த நாட்டு அரசு ஒரு லட்சம் காவ‌ல்துறை‌யின‌ரை ப‌ணி‌யி‌ல் ஈடுப‌டு‌த்‌தியு‌ள்ளது.

மிகு‌ந்த பாதுகா‌ப்பு ஏ‌ற்பாடுகளை செ‌ய்து‌ள்ளதாகவு‌ம், 5 நாள் ஹஜ்ஜின்போது எந்தவிதமான வன்முறைச் சம்பவமும் நடக்காது எனறும் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் அந்த நாட்டு உள்துறை அமை‌ச்ச‌ர் இளவரசர் நயேப் பின் அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.

உ‌ங்களு‌க்காக ஹ‌ஜ் ‌வீடியோ கா‌ட்‌சிக‌ள் ‌சில இ‌ங்கே இணை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்