மனிதனுக்கு இறைவ‌ன் அளந்தே கொடுக்கிறான்!

வானத்தில் இருந்து மழையை கூட அளந்தே இறக்குகிறோம் என்று இறைவன் கூறுகிறான். அதுபோல ஒவ்வொரு மனிதனுக்கும் எல்லாவற்றையும் இறைவன் அளந்தே கொடுக்கிறான்.

மழை வானத்தை பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது என்று கூறுவோம். பேய் மழை பெய்கிறது என்று கூறுவோம். ஆனால் அதற்கும் இறைவன் ஒரு வரம்பு வைத்திருக்கிறான் என்பதை பலர் உணர்வதில்லை.

நாம் இறைவனிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம். நாம் கேட்பது நமக்கு பொருத்தமானதாக இருந்தால் இறைவனின் கருணைக்கு அளவே இல்லை. இந்தத் தத்துவத்தைப் புரிந்து கொண்டால் மனிதர்கள் பேராசை வழியில் சென்று வரம்பு மீற மாட்டார்கள்.

நமக்குக் கிட்டியதுதான் நமக்கு இறைவனால் அளக்கப்பட்டது. அதற்கு மேல் பேராசைப் பட்டால் அதற்குரிய தண்டனையை நாம் அனுபவிக்க நேரிடும்.

குர்ஆனில் நபிகள் கூறியிருப்பது, "ஆகவே, விசுவாசிகளே நீங்கள் மிக்க தாழ்மையாகவும், அந்தரங்கமாகவும் (அத்தகைய) உங்கள் இறைவனிடமே (உங்களுக்கு வேண்டியவைகளைக் கோரிப்) பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அவன் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை." (அல்குர்ஆன் 7:55)

ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் அளந்து கொடுக்கிறான். அவனுடைய அளவில் குறையே இருக்காது. ஆனால் மனிதன் அளவுக்கு அதிகமாக வரம்பு மீறுவது இறைவனுக்கு பிடிக்காது என்பதே இதன் பொருள்.

வெப்துனியாவைப் படிக்கவும்